
வயல்களில் தேக்கிவைத்திருக்கும் நீரைத் திருட்டுத்தனமாக வரப்புகளில் பிளவுகள் ஏற்படுத்தி வடித்து விடுவதைக் குறிக்கும் ‘நட்டுமை’ என்னும் சொல், இலங்கையில் விவசாயக் கிராமங்களில் கள்ளொழுக்கத்திற்கும் உவமையாகப் பாவிக்கப்படுகிறது. இந்தத் தலைப்பே குறுநாவலின் மையச் சரட்டையும் குறிப்பாக உணர்த்துகிறது.


