இந்தக் கதை 1980களில் எழுதப்பட்டது. . இன்று நாம் சாதரணமாக எடுத்துக் கொள்ளும் பலப்பல விஷயங்கள் அப்போது கிடையாது. புடவை தான் அதிகமாக பெண்களால் உடுத்தப் பட்டது என்றாலும் திருமணம் ஆகாதப் பெண்கள் சுரிதார் அணியத் தொடங்கி இருந்தனர்.செல்வந்தர் வீட்டில் தான் போன் இருக்கும் . செல்போன் என்றால் என்னவென்றே தெரியாது. கம்ப்யூட்டர் கிடையாது. மால் என்று ஒன்றும் கிடையாது. இப்படிப் பட்ட சூழ்நிலையில் நடந்த கதை தான் அபிராமி - தனஞ்சயன் இருவரின் மோதல் காவியம். அபிராமி மிகவும் அழகான புத்திசாலியான நடுத்தர வர்க்கத்துப் பெண்.மிகப் பெரிய செல்வந்தரான சிவநாதனின் மகன் தனஞ்சயன் அவளை தான் திருமணம் செய்துக் கொள்வேன் என்று பிடிவாதம் பிடித்து அவனுடைய பெற்றோரும் அவனது ஆசையை நிறைவேற்றி வைத்தது ஏன் என்று அவளுக்குப் புரியவே இல்லை . அவன் ஆணழகன் .அவனுக்கு ஏற்றாற் போல் அவன் வர்க்கத்திலேயே எத்தனையோ ரதிகள் இருக்க மாட்டார்களா ? ஏன் ? ஏன் ? என்று அபிராமி குழம்பினாலும் அவ்ளுடைய பெற்றோர் திருப்தி அடைந்து ..இதோ திருமணமும் முடிந்தே விட்டதே ! அடுத்த நாள் புதிர் அவிழ்ந்தது ! அபிராமியின் தலையில் இடி விழுந்தது ! இனி அவளுக்கு எதிர்காலம் என்ன ?