என் பால்யத்தின் நீட்சி. என் தற்காலத்தில் நான் தப்ப விட்ட நினைவுத் திரட்டுகளின் உதிரம் மண்ணில் முளைத்து இக்காலத்தில் பட்டம் விரட்டுவதாக ஒரு கற்பனை. என் கண் வளையத்திலிருந்து மறைய இயலாமல் தவிக்கும் அந்த காகித பறவைகளை தாவி பிடித்துவிட மூளை உந்துகிறது. என் உயிரை அறுத்துக் கொண்டு பட்டத்துடன் பட்டமாக கீழிறங்காது. வானில் அலைந்தாட வேண்டும் இன்னும் வெகு தொலைவில் இருந்து இந்த நகரத்தைப் பார்க்க வேண்டும். மேலும் மேலும் மேன்மையற்றதாக பாவம் நீக்கியதாக இருப்பதை தரிசிக்க முடியும். விமானத்தில் பறப்பவனுக்கு நிலம் என்பது காட்சி பொருளாகி விடுகிறது. தரையில் நடப்பவன் கல் தடுக்கி விழத்தானே செய்வான். நான் விழுந்துக் கொண்டே இருக்கிறேன். - தொகுப்பிலிருந்து வனமேவும் ராஜகுமாரி