1996 இல் பல்வேறு இதழ்களில் உலக திரைப்படங்கள், இயக்குநர்கள்,இசை,கலை,ஓவியம் , என பல்வேறு கோணங்களில் ஒரு சினிமாவை எப்படி அணுக வேண்டும் ,
இருவேறு கலைஞர்கள் அணுகுமுறை எவ்வாறு உள்ளது, இந்திய கலைஞர்கள் எவ்வாறு உலக தரமான சினிமாவை கொடுத்தார்கள், எங்கு சறு க்கினார்கள் என விலாவரியாக விவரிக்கும் நூல்.
1996 இல் ஒரு சாதாரண புத்தகமாக வெளிவந்தது, 2024 இல் அப்படி வந்தால் சரியாக இராது என மெருகேற்றப்பட்டு , பெரிய அளவில், ஆர்ட் பேப்பரில் , படங்களுடன் பிரமாதமாக வடிவமைக்கப்பட்டு வந்துள்ள புத்தகம்...
நான் சினிமாவை நேசிப்பவன் என்றால் இது உங்களுக்கானது
எனக்கு உலக,உள்ளூர் கலை படைப்புகள் பிடிக்கும்,என்ன படம் பார்க்கலாம் - இந்த புத்தகத்தில் எண்ணற்ற படங்கள் பெயர்கள் உள்ளன.அதை பார்த்தால் போதும்.
சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என ஆர்வம் உள்ளவர்கள்,நல்ல சினிமா என்றால் எப்படி இருக்க வேண்டும் என பார்க்க வேண்டும் என நினைப்பவர்கள்..
வாழ்நாளில் இதில் குறிப்பிடப்பட்டுள்ள படங்களை பார்த்தே ஆக வேண்டும்....