பொதுவாக என் கதைகளை வாசகர்கள் ஊகித்துக்கொள்வதற்குரிய இடைவெளிகளுடன்தான் எழுதுவேன். என் எழுத்தை வாசிப்பவர்களின் கூர்மை குறித்து எனக்கு எப்போதுமே நம்பிக்கை இருந்துவந்துள்ளது. இக்கதைகளும் அந்த நம்பிக்கையைக் கோரியே நிற்கின்றன. ஓர் அமர்வில் வாசித்து முடித்துவிடக்கூடிய இச்சிறு நூலில் மறுபடியும் எடுத்து வாசிக்கும்போது கண்டுகொள்ளக்கூடிய நுட்பங்கள் இருக்கின்றன என்பதுதான் இக்கதைகளைத் தொகுத்தற்கான நியாயம்