சங்கரன்கோவில் பகுதியில் நேர்மைக்கு அடையாளமான இன்ஸ்பெக்டர் ஒருவரின் படுகொலையை விசாரிப்பதில் தொடங்கும் நாவல். சாதியால் மௌனமாக்கப்பட்ட குரல்கள், சட்டவிரோத குவாரிகளால் பறிக்கப்பட்ட நிலங்கள், தொழிலாளர்களின் இரத்தத்தில் கட்டப்பட்ட நிழல் சாம்ராஜ்ஜியம், அதிகாரத்தால் மறைக்கப்பட்ட நீதியின் கதவுகள், நீதிக்கான புரட்சிக்குழு, மேற்கு தொடர்ச்சி மலை, வளங்கள் சுரண்டப்படுவது, நாட்டார் தெய்வங்கள், சமணத் தொன்மம், சிறுபான்மையினருக்கான உரிமைகள் என வெவ்வேறு பிரச்சனைகளின் வழி கொலை குறித்த விசாரணை செய்கிறது.
ஒரே மூச்சில் படித்துவிடக் கூடிய சுவாரஸ்யமான நாவல், நில அரசியலின் கூர்மையான பக்கங்களையும் அரசியலமைப்பு தந்திருக்கும் உரிமை எத்தனை நுண்மையானது, எதிர்காலத்தை கூர்நோக்கி உருவாக்கப்பட்டது என உணரும் அசாதாரண காலத்தில் தான் வாசிக்கப்படுகிறது.