மனித உறவின் தீராத புதிர்களை, விடுவிக்க முடியாத சிக்கல்களைத் தொட்டுக் காட்ட முனையும் கதைகள் தனித்துவம் பெற்றுவிடுகின்றன. இத்தனை ஆண்டு காலமும் இலக்கியம் முட்டித் திறக்க முயலும் கனத்த ஒரு கதவின் மீது இந்தக் கதைகளும் தம்மளவில் விசையுடன் மோதுகின்றன என்பதே அவற்றுக்குச் சிறப்பான தகுதியைத் தருகின்றன .
செந்தில் ஜெகன்நாதனால் கதைச் சூழல்களையும் கதாபாத்திரங்களையும் உரையாடல்களையும் எளிமை யாகவும் கச்சிதமாகவும் இயல்பாக அமைத்துவிட முடிந்திருக்கிறது. சக மனிதர்களின் வாழ்க்கையையும் அவர்களது பாடுகளையும் அருகிலிருந்து கவனித்தவர்களுக்கு இந்த நுட்பங்கள் திருத்தமாகக் கைகூடிவிடும். எனவேதான் வாழ்வின் சாரத்தையும் அனுபவத்தின் ஆழத்தையும்கொண்ட நேர்த்தியான கதைகளை அவரால் எழுத முடிந்திருக்கிறது.
-எம்.கோபாலகிருஷ்ணன்