
அநாகதநாதம் - மழைக்கண்
Anagathanatham/அநாகதநாதம்.
Mazhaikan/மழைக்கண்
சிறப்பு சலுகையில் இரண்டு நூல்கள்
Non-returnable
Rs.350.00 Rs.390.00
Customize
Author
செந்தில் ஜெகன்நாதன் Publisher
சொற்றுனை பதிப்பகம் Genre
சிறுகதைகள் Language
Tamil Share :
Product Details
Anagathanatham/அநாகதநாதம்.
மனித உறவின் தீராத புதிர்களை, விடுவிக்க முடியாத சிக்கல்களைத் தொட்டுக் காட்ட முனையும் கதைகள் தனித்துவம் பெற்றுவிடுகின்றன. இத்தனை ஆண்டு காலமும் இலக்கியம் முட்டித் திறக்க முயலும் கனத்த ஒரு கதவின் மீது இந்தக் கதைகளும் தம்மளவில் விசையுடன் மோதுகின்றன என்பதே அவற்றுக்குச் சிறப்பான தகுதியைத் தருகின்றன.
செந்தில் ஜெகன்நாதனால் கதைச் சூழல்களையும் கதாபாத்திரங்களையும் உரையாடல்களையும் எளிமை யாகவும் கச்சிதமாகவும் இயல்பாக அமைத்துவிட முடிந்திருக்கிறது. சக மனிதர்களின் வாழ்க்கையையும் அவர்களது பாடுகளையும் அருகிலிருந்து கவனித்தவர்களுக்கு இந்த நுட்பங்கள் திருத்தமாகக் கைகூடிவிடும். எனவேதான் வாழ்வின் சாரத்தையும் அனுபவத்தின் ஆழத்தையும்கொண்ட நேர்த்தியான கதைகளை அவரால் எழுத முடிந்திருக்கிறது.
-எம்.கோபாலகிருஷ்ணன்
Mazhaikan/மழைக்கண்
செந்தில் ஜெகன்நாதனின் எழுத்துக்கள் உணர்வுகளும். உறவுகளும் குவிந்தவை இதற்கு முன்பு வண்ணநிலவனின் எழுத்துக்களில்தான் நான் இப்படி கரைந்திருக்கிறேன். செந்திலின் கதையில் வரும் அப்பா என் அப்பாவையும், அவரது கதையில் வரும் பருத்திப்புடவையில் என் அம்மாவின் புடவை வாசனையையும் உணர்கிறேன். அடுத்த பத்தாண்டுகளில் இந்த எழுத்தின் வீரியமும். வசீகரமும் எதனாலும் மங்கப் போவதில்லை, கலைஞனுக்கு அது சாந்தியம், செந்தில் ஜொனநாதன் நிஜமான கலைஞன்!
- பவா செல்லதுரை
செந்தில் ஜெகன்நாதனின் சிறுகதைகள் இரண்டு களங்களின் அன்றாடத் தருணங்களால் ஆனவை. கீழத்தஞ்சையின் வேளாண் குடும்பமும் அதன் பின்னணியாகிய சிற்றூரும். இன்னொரு பக்கம் திரையுலகம். இந்த இரண்டு உலகங்களிலும் மாறிமாறி அலையும் செந்தில் ஜெகன்நாதனின் கலை வெறுமே வாழ்க்கைச் சித்திரம் என்பதிலிருந்து அரிய கவித்துவம் வழியாக மேலெழும் தருணங்களே அவரை கலைஞராக்குகின்றன.
அன்றாடத்தருணங்களைச் சொல்ல சிடுக்கற்ற ஒழுக்குகொண்ட மொழி தேவை. தன்னிச்சையான சொற்றொடர் இணைப்புகள் வழியாக அந்த மொழி நிகழவேண்டும் என்றால் இயல்பான மனநிலையும் அதை வெளிப்படுத்தும் மொழிப்பயிற்சியும் இன்றியமையாதவை. அவை செந்தில் ஜெகன்நாதனின் கதைகளில் எப்போதுமுள்ளன. சொற்சுழற்சிகளோ செயற்கையான யத்தனங்களோ இல்லாமல் 'கிளாரினெட்டின் துளைகள் மீது நானியம் கொத்தும் சிட்டுக்குருவிகள் போல அசைந்த விரல்கள்' என்று சொல்லிச் செல்லும் நடை அவருக்கு எப்போதும் கைகொடுக்கிறது. சிறுகதையின் கலை அவர் கதைகளில் துலங்க இந்த மொழி எப்போதும் உதவுகிறது.
- ஜெயமோகன்
எத்தனையோ நாட்கள் ஆகிவிட்டது இப்படியொரு செவ்வியல் கதையைப் படித்து. செந்தில் ஜெகன்நாதன் மழைக்கண் கதையில் நாலாபுறங்களில் இருந்து தாக்கும் அம்புகளை ஏந்தியபடி, தன் ஆங்காரத்தை கொட்டியபடி. தாய்மையின் கொந்தளிப்பில் உழன்றபடி ஓரிஜிலை தோட்டக் காரியை ரத்தமும் சதையுமாக கொண்டு வந்து நிறுத்திவிட்டார். ஓங்க அம்மாளுக்கு நெலத்தோட ரேகை எல்லாம் அத்துப்படிடா தம்பி என்று எழுதும்போதே என் கால்கள் சேற்றை மிதித்துவிட்டன. 'பருத்தி செடிய பாக்குறப்போ பாலகுட புள்ளைகளப் பாக்குறமாதிரி இருக்கு' என்ற வரியைத் கடக்கும்போது நடுதோட்டத்தில் நின்றுவிட்டேன். நோயோடு மனம் கேட்காமல் தானும் இறங்கி பருத்தி எடுத்து மடியில் போடுகிறபோது என் தாயை கண்டடைந்துவிட்டேன் தோல் நோயைப் பற்றிய வாதையை நோவாகவே எழுத்தில் கொண்டு வந்து விட்டார். இந்தக் கதையில் அற்புதமான தாயை கொண்டு வந்துவிட்டார். கு.அழகிரிசாமி இப்படித்தான் உயிர் துடிக்க எழுதுவார். போதுமே இப்படி ஒரு கதை பேர் சொல்ல!
- சு.வேணுகோபால்
Ratings And Reviews



