பட்சாத்தா - ஒரு நாடோடிப் பாணனின் இசைக் குறிப்புகள் தமிழ் சிறுகதை உலகில் இதுவரை காணாத களங்களைக் கொண்டிருப்பதை இத்தொகுப்பின் சிறப்பாகச் சொல்லலாம். சொந்த நிலத்திலிருந்து எழுதப்பட்ட வெவ்வேறு கதைகளும் கூட கூறும் முறையால் தனித்துவ மிக்க கதைகளாக உருமாறி இருக்கின்றன. பணி நிமித்தம் புலம்பெயரும் தமிழர் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட வழக்கமான கதைகளில் இருந்து வேறுபட்டு ஒரே மேசையில் இந்திய பிரெஞ்சு ஆங்கில ஸ்பானிய மது போத்தல்களை அருகருகே வைத்துவிட்டுச் செல்லும் Bartender இந்தக் கதை சொல்லி